ஆண் பெண் இருவரையும் இணைக்கும் ரசவாதி ‘அன்பு’. இதுமட்டும் அல்ல... தோழமை, பரஸ்பர மரியாதை, விட்டுக் கொடுத்தல் என யாவும் அன்பின் அடிப்படையில் இருப்பதே. ‘உனக்காக நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும்...’ என ஆணும், ‘இது என் குணம். நான் இப்படித்தான்...’ என பெண்ணும் முற்றிலும் நேர்மாறான, எதிர் எதிர் துருவ..
காதலுடன் தொடங்கும் எத்தனையோ தம்பதிகளின் வாழ்க்கை கடைசிவரைக்கும் அதே காதலுடன் நீடிக்கிறதா? பெரும் அன்போடும் ஆரவாரத்தோடும் தொடங்கும் இல்லறம் சில நாட்களிலேயே ஏன் சலித்துப்போகிறது? ஊடலும் கூடலும் மாறி மாறித்தான் நம் வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்துகின்றன. ஆனால், ‘இன்பமும் துன்பமும் இணைந்த கலவைதான் வாழ்க்கை’..
ஆதிமங்கலம்' என்ற கற்பனை கிராமத்துக்குள் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகமாகும்போது என்னென்ன கூத்தெல்லாம் நடந்தன என்பதே இந்தப் புத்தகத்தின் சாரம். ஒவ்வொரு நிகழ்ச்சியும் தெறித்துத் தெறித்துச் சிரிக்கவைக்கும்! நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதுவதற்கு கூர்ந்த கவனிப்பும் தனித்துவமான நடையும் வாழ்க்கையின் ம..
2011-ஜனவரியில், ‘சென்னை புத்தகக் காட்சி’ நடந்த நேரத்தில் ‘ஆனந்த விகடன் காலப்பெட்டகம்’ வெளியானது. 1926 முதல் 2000 வரையிலான தமிழக, இந்திய மற்றும் உலக நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டிய விகடனின் காலக் கண்ணாடி அந்தப் புத்தகம் என்றால் மிகையில்லை! அந்தப் புத்தகத்துக்கு வாசகர்களாகிய உங்களிடம் கிடைத்த அமோக..
இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் இரட்டை குழந்தைகளைப்போல ஆகிவிட்டன நம் வாழ்க்கையோடு ஐக்கியமாகிவிட்ட கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும். அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கைக்குப் பேருதவி புரியும் சாதனங்களுள் இவையே இன்றைய காலகட்டத்தில் முதல் இடத்தில் உள்ளன. அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் வாழ்க்கைத் தரத்..
கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தார் தந்தை. “என் மகன் ப்ளஸ் ஒன் படிக்கிறான்... ஃபிசிக்ஸ், கெமிஸ்டரி, மாத்ஸ் குரூப் எடுத்திருக்கான். ப்ளஸ் டூ முடிச்சுட்டு அவனுக்கு இன்ஜினீரிங்க நாலு வருஷம் படிக்கணுமாம். அது முடிஞ்சதும் அமெரிக்கா போய் எம்.எஸ். பண்ணனுமாம். மகனைப் படிக்க வைக்க என்கிட்டே பண வசதி இ..
ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம், எஸ்.எஸ்.எல்.சி படித்திருந்தாலே ஏதோ ஒரு நிறுவனத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலைகிறார்கள். தொழிற்துறை, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, வங்கித் துறை, தகவ..
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - ம.செந்தமிழன்:இயற்கையைச் சீரழித்து வளர்ச்சி காணுதல் என்பதன் உண்மையான பொருள், மனிதகுலம் தன்னைத்தானே அழித்துக்கொள்வதுதான். ஏனெனில், மனிதர்களும் இயற்கையின் அங்கங்கள்தான். 'இயற்கை வேறு, மனிதன் வேறு' என்ற மயக்கத்தை நவீன அறிவியல் நிலைநாட்டியுள்ளது.நமது மண்ணின் ..
உலக உயிர்களை தம் உயிர்போல் பாவிக்கும் இயல்பு நம்முள் எத்தனை பேருக்கு இருக்கிறது? இருப்பினும், அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதைவிட, அன்புக்குக் கட்டுப்படும் ஜீவன்களே இங்கு அதிகம். சாந்த குணம், அமைதியான பேச்சு, அரவணைக்கும் பண்பு, சரியான வழிகாட்டி இவைதான் அன்பின் வழியில் நடக்கும் ஆத்மாவின் அடையாளங்கள். ச..
ஆயுத தேசம் : கொங்கு நாட்டின் தொழில்நுட்ப வரலாறுகொங்கு எனப்படும் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பகுதியைப் பற்றி இந்திய வரலாறும் தமிழக வரலாறும் அவ்வளவாக எடுத்துரைப்பதில்லை.கொங்கு நாட்டுப் பகுதிகளின் உலோகங்கள்தான் இன்றைய ராக்கெட் தொழில்நுட்பத்துக்கு அடிப்படையாக விளங்கின என்பன போன்ற அறியப்படாத பல ஆச்சர்யத்..
‘பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்ற முதுமொழிக்கேற்ப நம் நாட்டின் செடிகளிலும் கொடிகளிலும் பூக்களிலும் காய்களிலும் கனிகளிலும் விதைகளிலும் மருத்துவப் பயன்கள் கொட்டிக்கிடக்கின்றன. அறுகம் புல் முதல் ஆலம் விழுது வரை அனைத்திலும் மருத்துவக் குணம் நிறைந்திருக்கிறது. கிராமப்புறங்களில் நம் வீ..
ஆனந்த விகடனில் 'உடலே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' ஆயுர்வேத மருத்துவத் தொடர் வந்துகொண்டிருந்த போது, அதைப் படித்த வாசகிகள், 'அன்றாட வாழ்வில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் அல்லல்படும் எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா?' என்று கேட்டு நிறைய ..