Menu
Your Cart

செல்லக் கருப்பி

செல்லக் கருப்பி
-5 %
செல்லக் கருப்பி
அல்லி பாத்திமா (ஆசிரியர்)
₹266
₹280
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை 'செல்லக் கருப்பி' நாவல் வெறும் கதையல்ல. தேயிலைத் தோட்டத்தின் மலைகளின் உலைகளில் கொதிக்கும் மக்களின் பதம் காட்டும் ஓர் உயிர் இவள். இவளது கண்ணீரும் கதறலும் அம்மக்களின் வலிகளின் சிறு துளிதான். அம்மக்களோடு பேசிப்பழகி கண்டு அந்தத் தேயிலைக்காட்டின் வாழ்வின் உதிரத்தையும் கண்ணீரையும் வியர்வையையும் பிழிந்து ஒரு நாவலாக வடித்துள்ளேன். அந்த உலகம் தனி. அவர்களது காயங்கள் ஆறாத இரணங்கள். வலிகள் பழகிப்போன இதயங்களில் இன்னும் பிரிந்து வந்த மண்ணின் வாசமும் இழந்து போன உரிமைகளின் ஏக்கமும் நிறைந்து ததும்புகின்றன. உலுக்கினால் தங்கமும் வைரமும் உதிரும் என்ற ஆசைகள் கண்ணாடி பிம்பங்களாய் கைக்கு எட்டாமல் போக பேராசைக்காரர்களின் கட்டளைகளால் கட்டப்பட்ட பாவப்பட்ட சீவன்களின் பரிதாபக்கதை இது.
Book Details
Book Title செல்லக் கருப்பி (Chellakarupi)
Author அல்லி பாத்திமா
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Dec 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

"வெட்டப்பட்ட ஒரு மரம் அதன் அடிக்கட்டையின் ரணத்தை சூரிய வெளிச்சத்தில் நம்மிடம் காட்டும்போது நம்மிடம் அதன் சுயசரிதையைத் தெளிவான ஒரு மொழியில் சொல்கிறது" - இது நோபல் பரிசு பெற்ற ஹெஸ்ஸேவின் வரிகள்... இந்த நெடுங்கதையின் நாயகி பாண்டிச்சி, அப்படி ஒரு மரமாகத்தான் கிளைவிரித்து நிற்கிறாள். தனிமரமல்ல; அவளுக்குள..
₹209 ₹220