Menu
Your Cart

வீரமங்கை வேலுநாச்சியார்

வீரமங்கை வேலுநாச்சியார்
New -5 %
வீரமங்கை வேலுநாச்சியார்
பாலபாரதி (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

சிவகங்கைச் சீமையை

மீட்டெடுத்த பேரரசி

ந்திய சுதந்திரத்திற்காக வெள்ளையர் படையை எதிர்த்து போரிட்ட முதல் வீரப் பெண்மணி, ஜான்சி ராணிக்கு முன்னோடியாக இருந்த வீர மங்கை, 'கணவர் இறந்ததும் உடன்கட்டை ஏறாமல்; கணவனைக் கொன்ற கயவனைக் கொல்லாமல் சாகமாட்டேன்' என்று சபதம் எடுத்த வீர மங்கை, வெள்ளையர்களை ஓட ஓட விரட்டியடித்து சவாலில் வென்று; மீண்டும் சிவகங்கையைக் கைப்பற்றிய பேரரசி, வெள்ளையரிடம் இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் போராடி மீட்ட பெருமைக்கு உரிய வீர மங்கை... வேலு நாச்சியார்!

இந்திய சுதந்திரப் போரில் ஆண்களின் பங்களிப்பு எவ்வளவு அளப்பரியதோ, அதற்கு துளியும் குறைவில்லாதது பெண்களின் பங்களிப்பு! ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னோடியாக; தமிழ்நாட்டு சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள் இருந்துள்ளனர். இந்திய சுதந்திரப் போரில் நாட்டு விடுதலைக்காக ஆங்கிலேயருடன் போராடிய முதல் வீரப் பெண்மணியாக இருக்கிறார் வீர மங்கை வேலு நாச்சியார்!

ஆங்கிலேயர்களை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற அந்நிய எதிர்ப்புப் போராட்டத்தில் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற வீர மறவர்கள் வரிசையில் சிவகங்கைச் சீமையின் பேரரசி வீர மங்கை வேலு நாச்சியார், அவரது படைத் தளபதிகாளான மருது சகோதரர்கள், நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்த பெண் போராளி குயிலி ஆகியோரின் வீரம் செறிந்த வரலாறு காலத்தால் அழிக்க முடியாதவை! போராட்டக் களத்தில் வெள்ளையரை வீழ்த்திய வீர மங்கை வேலு நாச்சியாரின் பெருமைகளைப் பற்றிப் பேசுகிறது இந்தப் புத்தகம்...!

பாசத்துடன்

பாலபாரதி

Book Details
Book Title வீரமங்கை வேலுநாச்சியார் (Veeramangkai Vaelunaachchiyaar)
Author பாலபாரதி (Balabharathi)
ISBN 9789395132237
Publisher கிளாசிக் பப்ளிகேஷன்ஸ் (Classic Publication)
Pages 114
Year 2026
Edition 1
Format Paperback
Category History | வரலாறு, தமிழர் வரலாறு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha