Menu
Your Cart

தமிழர் மருத்துவம்

தமிழர் மருத்துவம்
தமிழர் மருத்துவம்
மரு.மைக்கல் செயராசு (ஆசிரியர்), ஏ.சண்முகானந்தம் (தொகுப்பு), தயாளன் (தொகுப்பு)
₹ 70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தமிழர் மருத்துவம் - மரு.மைக்கல் செயராசு:

சித்த மருத்துவத் தாவரங்களைக் களத்திலும் சித்த மருத்துவச் செய்திகளை அச்சிலும் பதிவு செய்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பவர் பாபநாசத்தைச் சேர்ந்த மூத்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு. சித்த மருத்துவம்தான் தமிழரின் ஆதி மருத்துவம் என்று பல்வேறு தரவுகள் மூலம் இந்தப் புத்தகத்தில் எடுத்துரைக்கிறார் மருத்துவர் மைக்கேல். அத்துடன், தாவர-உயிரினப் பன்மை நிறைந்த பொதிகை மலையின் தனிச்சிறப்பைப் பற்றியும் விரிவாகக் கூறியுள்ளார். குறிப்பாக இயல் தாவரங்கள் எப்படி நம் மண்ணைக் காக்கின்றன, மருந்தாகப் பயன் தருகின்றன என்பதையும் தெளிவாக விவரித்துள்ளார்.

 ‘தமிழும் தமிழ் மருத்துவமும்’ எங்க தொன்றியதுன்னு கேட்டா நாம கண்ணை மூடிக்கிட்டுச் சொல்வோம் பொதிகைன்னு.ஏன் சொல்றோம்னு யாருக்கும் தெரியாது.அதுக்குக் காரணம் என்னவென்று கேட்டால்,நிறையத் தாவரங்கள் இருக்குறதால மனிதன் பேச ஆரம்பிக்கும் போது,மொழி உருவாகும்போது முதல்ல தாவரங்கள் வச்சுத்தான் மொழியை உருவாக்கியிருப்பான் .இது என்ன மரம் என யோசித்து அவன் பேர் வைக்க ஆரம்பிப்பான்.

அப்ப மொழி உருவாகிறதுக்குத் தாவரங்கள் நிறைய இருக்கணும்.தாவர வளம் அதிகமாக இருக்கிற இடத்துல தோன்றின மொழியில அதிகச் சொல் வளம் இருந்திருக்கும்.அப்படித்தான் இந்தப் பொதிகையை நாம பாக்கணும்.பலவிதமான காரணங்களால் பொதிகை மலையை பல்லுயிர்ப் பெருக்கத்தின் ‘உச்சாணிக்கொம்பு’ன்னு சொல்றோம்.
Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

இரவுச் சாப்பாடு சாப்பிடுகிறபோது எங்கம்மா ஏன்ட்ட நிறைய பேசிட்டே இருப்பாங்க.ஒவ்வொரு கதையா சொல்லுவாங்க.அவ இந்த ஊர்லயே பிறந்து வளர்ந்தவ.அவ இந்த ஊர்லயே இருந்ததுனால இந்த ஊருடைய வளர்ச்சி,பிற சாதிகளோட தொடர்பு, பழமொழிகள், சொலவடைகள், proverbs, phrases இதுலயெல்லாம் எங்கம்மா கெட்டிகாரங்க.எல்லோரும் சொல்வாங்க நிற..
₹ 100
காடு இதழ்கள் இதுவை வெளியான முதல் 12 இதழ்கள் உள்ளத்தொகுப்பு......
₹ 720
பூச்சிகள் ஓர் அறிமுகம்வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பொன்வண்டுகளை அழகியலாகவும், கரப்பான்கள், பூரான், புழுக்களை அருவருப்புடன் பார்க்கும் சிந்தனை போக்கு நம் அனைவர் மனத்தில் ஏதேனும் ஒரு மூலையில் படிந்துள்ளது. இதற்கான காரணங்கள் அல்லது அச்சம் எப்போது தோற்றம் கொள்ள ஆரம்பித்தது என்பது தனித்த ஆய்விற்குரிய..
₹ 60
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.