Menu
Your Cart

எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

அரூ அறிவியல் சிறுகதைகள் 2020
-5 %
தமிழில் அறிவியல் புனைவுகள் சொற்பமாகவே எழுதப்பட்டு வருகின்றன. Virtual Reality Headsetஐ மாட்டிக் கொண்டதும் அது எப்படி நம்மை முற்றிலும் புதிய வேறோர் உலகத்துக்கு இட்டுச் செல்கிறதோ அதேபோல் அறிவியல் புனைவும் நாம் இதுவரை அறிந்திராத உலகங்களைக் காண்பிக்கின்றது. அந்த வகையில் உள்ள 15 கதைகளும் வாசகர்களுக்குப் ப..
₹304 ₹320
அரூ அறிவியல் சிறுகதைகள் 2021
-5 %
'அரூ' கனவுருப்புனைவு (science fiction & fantasy) சார்ந்த படைப்புகள் வெளியிடும் தமிழ் மின்னிதழ். 2021ஆம் ஆண்டிற்கான அரூ அறிவியல் சிறுகதைப் போட்டிக்கு வந்திருந்த சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்தவையாக அரூ குழு தேர்வு செய்த 12 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். "'அறிவியல் புனைவு' என்பது, 'நிஜப் பொய்' என்கிற..
₹371 ₹390
அறம் பொருள் இன்பம்
-5 %
நான் சிந்திக்கும் மொழி என்பது வரலாற்றின் மூலமாக எனக்குக் கொடுக்கப்பட்டதே என்றாலும் புரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், உணர்தல் போன்ற செயல்பாடுகளின் மூலம் அகம், புறம் இரண்டையும் என் மனதின் பல்வேறு அடுக்குகளுக்குக் கொண்டு செல்கிறேன். இந்த அனுபவத்தோடு பல்லாயிரம் மனிதத் தாதுக்களின் மகரந்தத் துகள்களின..
₹333 ₹350
அறல்
-5 %
ராஜேஷ் வைரபாண்டியனின் கதைகள் மனித மனதின் ஆழத்தில் அலைவுறும் விசித்திரங்களைச் சித்திரமாகத் தீட்டக்கூடிய தன்மையுடையவை. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பன்னிரண்டு கதைகளும் வெவ்வேறு களங்களை திருகலற்ற மொழியாலும், நுண்ணிய சித்தரிப்பாலும் வாசிப்பின்பத்தை அதிகப்படுத்தும் கதைகளாக அமைந்திருப்பதே இதன் பலம..
₹143 ₹150
அறவான்
-5 %
இவை அன்பு வயப்பட்ட கதைகள், அதே சமயம் அறத்தின் பாற்பட்ட கதைகள். காதல், கல்யாணம், கள்ளம் என மும்முனையிலும் முயங்கி இயங்கும் ஆண் - பெண் உறவுச் சிடுக்குகள், பட்டு வஸ்திரம் ஒன்றைத் தறியில் நூல் நூலாகக் கோத்து நெசவு செய்து எடுப்பது போல் இந்தப் புனைவாக்கங்களில் நேர்த்தியாகச் சேகரமாகி இருக்கின்றன. நல்லதுக்க..
₹209 ₹220
அறிவியல் கதைகள்
-5 %
அறிவியல் என்பது பெருங்கடல். சொல்லப்போனால், பல பெருங்கடல்களின் தொகுப்புதான் அது. அந்தக் கடல்களில் நுழைந்து, மகிழ்ச்சியாக நீச்சலடித்து, அலைகளின்மீது பெருமிதத்துடன் பயணம் செய்த பல வல்லுனர்களை இந்தப் புத்தகத்தில் நீங்கள் சந்திக்கலாம். அதே நேரம், 'அடடா, அறிவியலா?' என்று அஞ்சி ஒதுங்கவேண்டியதில்லை. பல அறிவ..
₹152 ₹160
அறிவே சிவம்
-5 %
எல்லாப் போர்களுமே தொழில்நுட்பத்துக்கான போர்கள்தாம். கல்லால் அடித்துக்கொண்டிருந்த காலத்தில் வில்லைக் கண்டுபிடித்த தரப்பு வென்றது. ஈட்டி அம்பு தரப்பை யானையைப் பழக்கக் கற்ற தரப்பு வென்றது. துப்பாக்கி பீரங்கியைக் கண்டுபிடித்த தரப்பு என்று அணுகுண்டு வரை பலமான ஆயுதத்தின் தரப்புதான் வென்றிருக்கிறது. இருப..
₹304 ₹320
அறுபத்து ஏழாவது அடி
-5 %
Believe - நம்பிக்கை கொள் என்று சச்சின் தெண்டுல்கர் ரெய்னாவிடம் சொன்னார், அவரோ அதைத் தன் உள்ளத்தில் சுமந்து, அந்தச் சொல்லையே தன் கையில் டாட்டூவாகப் பச்சை குத்திக்கொண்டார். ஓர் இளம் கிரிக்கெட் வீரராகத் தான் சந்தித்த சவால்களை இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார். பள்ளியிலும், கிரிக்கெட் பயிற்சி மையங..
₹257 ₹270
அலகிலா விளையாட்டு
-5 %
பா. ராகவனின் இந்நாவல் தத்துவச் சிடுக்குகளின் பிடியில் இருந்து மானுட குலத்தை முற்றிலும் விடுவிக்க முடியுமா என்று ஆராய்கிறது. வாழ்வுக்கும் தத்துவங்களுக்குமான இடைவெளி காலந்தோறும் அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் தத்துவங்களின் தேவைதான் என்ன? 2003ம் ஆண்டு இலக்கியப் பீடம் மாத இதழ் நடத்திய நாவல் போட்டி..
₹190 ₹200
அலர்
-5 %
எந்த ஒரு பெண்ணும் பாலியல் தொழிலை ஆசைப்பட்டு ஏற்பதில்லை. யாருடைய ஆசைக்கோ பலியாகிறாள். சமூகம் அவளை மீட்டெடுப்பதில்லை. வரலாறு என்பது மன்னர்களுக்கும் மகாராணிகளுக்கும் மட்டுமானதல்ல. மண்ணில் காலங்கள் புதைந்து கொண்டே இருக்கிறது. புதையுண்ட காலங்களில் நெளியும் எல்லாப் புழுக்களும் ஒன்றே. எந்தப் புழுவும் கிர..
₹428 ₹450
அலை உறங்கும் கடல்
-5 %
அற்புதங்களும் அவலங்களும் ஒன்றாகக் காட்சியளிக்கும் ராமேஸ்வரத்தில் நிகழ்கிறது கதை. பெரிய அளவில் கல்வியோ, தொழில் வாய்ப்புகளோ இல்லாத இத்தீவில் மக்களின் பொருளாதாரம் கோயிலையும் கடலையும் மட்டுமே சார்ந்துள்ளது. ஆகவே, மீன்களும் மந்திரங்களும் மட்டுமே அங்க விலைபோகும் சரக்குகள். இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்த க..
₹200 ₹210
அல் காயிதா ஓர் அறிமுகம்
-5 %
அல் காயிதாவின் தோற்றம் முதல் ஆப்கன் யுத்தம் வரையிலான காலக்கட்டத்தில் நிகழ்ந்த அனைத்தையும் துல்லியமாகப் படம் பிடிக்கிறார் ஆசிரியர். அல் காயிதாவைப் பற்றிய முழுமையான புரிதலுக்கு உதவும் ஒரே தமிழ் நூல் இதுதான். சர்வதேசத் தீவிரவாத இயக்கங்களின் நெட் ஒர்க் குறித்த பா. ராகவனின் விரிவான ஆய்வுநூலான 'மாயவலை'யில..
₹209 ₹220
Showing 121 to 132 of 844 (71 Pages)