Menu
Your Cart

எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

அச்சுதம் கேசவம்
-10 %
தெருவில் சிறு பையன்களும், முட்டாக்கை எடுத்து விட்டபடி ஒரு கிழவியும், நாலைந்து நடு வயசுப் பெண்களும் ஆட ஆரம்பித்திருந்தார்கள். சீராகக் கைதட்டு ஒலித்துக் கொண்டிருந்த தெரு நடுவில் வைத்தாஸும் ஆட ஆரம்பித்தான். மேலே படிந்து சிதறும் ஆலங்கட்டிகளை விலக்காமல் ஆடினான் அவன். அவன் ஆடுவதால் அவனாக இருக்கிறான். ..
₹513 ₹570
அடுத்த கட்டம்
-10 %
உங்களுக்குக் கதை படிக்கப் பிடிக்குமா? புதிய விஷயங்கள், வெற்றி உத்திகளைக் கற்றுக்கொள்ளப் பிடிக்குமா? இந்த இரண்டும் ஒரே புத்தகத்தில் சேர்ந்து கிடைத்தால் எப்படியிருக்கும்! 'அடுத்த கட்டம்', தமிழின் முதல் பிஸினஸ் நாவல். திறமையுள்ள, கற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்கிற இளைஞர் ஒருவருடைய கதையைச் சொல்லி அதன்மூலம் ந..
₹153 ₹170
அதிகாரம் அமைதி சுதந்திரம்
-10 %
நான் உங்களுக்கு அளிப்பது சிந்தனைகள் அல்ல; சிந்தனா முறை. அந்த சிந்தனா முறையின் நோக்கம் சுதந்திரம்.  சமூகம் உங்களை ஒரு கடவுளை, ஒரு தீர்க்கதரிசியை , ஒரு தத்துவத்தை, ஒரு கோட்பாட்டைப் பின்பற்றச் சொல்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்… யாரையும் எதையும் பின்பற்றாதீர்கள். உங்களை நம்புங்கள். உங்கள் மன..
₹135 ₹150
அதே கதை மீண்டும் ஒரு முறை
-10 %
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘சமீபத்திய மலையாள சிறுகதைகள் ‘ என்ற புத்தகம் வெளிவந்து பெரிதாகப் பேசப்பட்டது. அதே தரத்தில் இப்போது ஸ்ரீபதி பத்மநாபாவின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள இத்தொகுப்பு தமிழில் இதுவரை அதிகம் அறியப்படாத, ஆனால் மிக முக்கியமான மலையாள எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறது...
₹198 ₹220
அநீதி அந்தாலஜி
-10 %
சிறுகதையில் பலவித சாத்தியங்களை முயன்று பார்க்கும் அராத்து இந்தத் தொகுப்பில் சுவாரசியமான ஒரு விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார். இதைப்படிக்கும் வாசகர்கள் அனைவரும் இந்த விளையாட்டின் பங்கேற்பாளர்கள். ஒரே கதைக்களனில் மூன்று வெவ்வேறு விதமான மனிதர்கள் நடமாடுகிறார்கள். நீங்கள் யாருடன் உங்களை அடையாளப்படுத்திக..
₹180 ₹200
அந்த ஃபார்வர்ட் பொத்தானை அழுத்துமுன்...
-10 %
நம்முடைய அறிவு என்பது நாம் படித்த, பார்த்த, கேட்ட விஷயங்களின் தொகுப்புதான். அப்படி ஏராளமான விஷயங்கள் நாள்தோறும் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. அவற்றைச் சரியாக வடிகட்டிப் புரிந்துகொண்டு மூளையில் சேமித்துக்கொள்வதும் பின்னர் தேவையான நேரத்தில் அவற்றை எடுத்துப் பயன்படுத்துவதும் முன்னேற்றத்துக்குத் த..
₹234 ₹260
அந்தோனின் ஆர்த்தோ - ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்
-10 %
நாங்கள் உங்களுடைய நாகரீகத்துக்கும், மதிப்பீடுகளுக்கும் அப்பால் வாழ்பவர்கள். எங்கள் உலகில் எதுவுமே வீழ்ச்சி அல்ல. எங்களுக்கு மரணம் கிடையாது. ஏனென்றால், எங்களுக்கு வாழ்வும் மரணமும் ஒன்றுதான். ஆனாலும் ஏன் இந்த நிலத்திலிருந்து கிளம்புகிறோம்? இந்த நிலம் தன் ஆன்மாவை இழந்து விட்டது. ஆன்மாவின் மரணம்தான் எங்..
₹108 ₹120
அந்நியனுடன் ஓர் உரையாடல்
-10 %
சாருவின் இந்தப் பேட்டியில் பேசுகிறவற்றில் கவனிக்கத்தக்க ஒன்றாக நான் கருதுவது ‘அவர் நான் மக்களுக்காக எழுதவில்லை. மக்களுக்கு எதிராக எழுதுகிறேன்’ என்பது. மக்கள் திரளின் சடத்தன்மைக்கு எதிராக எழுதுவது. நாஞ்சில் நாடன் ‘சொரணை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கக் கூடும். இந்தச் சொரணையை உசுப்பும் வேலையை ச..
₹297 ₹330
அன்சைஸ்
-10 %
கௌண்டமணியிடம் செந்தில் உதை வாங்கினால் சிரிக்கிறோம். போகிற வருகிறவர்களெல்லாம் வடிவேலுவை இழுத்து வைத்து இம்சிக்கும்போது சிரிக்கிறோம். மிஸ்டர் பீனின் பைத்தியக்காரத்தனங்களுக்கு மனத்தைப் பறிகொடுத்துச் சிரிக்கிறோம். இதில் இருந்து என்ன புரிகிறது? யாருக்காவது துன்பம் வரும் வேளையில் நாம் அவசியம் சிரிக்கிறோம்..
₹198 ₹220
அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு
-10 %
இப்படி ஒரு நாவல் இனிமேல் தமிழில் வருமா என்பது சந்தேகம்தான். கி.பி. 258ஆம் ஆண்டு வலேறியன் என்ற ரோமைப் பேரரசன் கிறிஸ்துவர்களை வதைத்தான். திருச்சபையின் சொத்துக்களை சூறையாட நினைத்திருந்தபோது இரண்டாம் சிக்ஸ்தூஸ் என்ற போப் திருச்சபையின் சொத்துக்களை விற்று ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார். சொத்துக்கள் எத..
₹306 ₹340
அன்புடை நெஞ்சம்
-10 %
அகப்பாடல்கள் தமிழின் பெருமை. இரண்டு தனிநபர்களுக்கிடையேயுள்ள அன்பைக் காட்டுகின்ற இந்தப் பாடல்கள் அந்தந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறையையும் அழகாகப் பதிவுசெய்வதால், எப்போது, எங்கிருந்து வாசித்தாலும் அந்தக் காதலர்களுக்குச் சற்றே நெருங்கிவிடுவதுபோலவும், அவர்களிடமிருந்து நாசூக்காக விலகிநின்று அந்த அன்பை..
₹234 ₹260
அபிதா
-10 %
அம்பாளின் பல நாமங்களில் அபிதகுசாம்பாளுக்கு நேர்த்தமிழ் ‘உண்ணாமலையம்மன்’. இட்டு அழைக்கும் வழக்கில் பெயர் அபிதாவாய்க் குறுகிய பின், அபிதா = உண்ணா. இந்தப் பதம் தரும் பொருளின் விஸ்தரிப்பில், கற்பனையின் உரிமையில், அபிதா = ஸ்பரிசிக்காத, ஸ்பரிசிக்க இயலாத என்கிற அர்த்தத்தை நானே வரவழைத்துக் கொண்டேன். – ல..
₹108 ₹120
Showing 85 to 96 of 671 (56 Pages)